வானம்,நிலவு, நான், அவள்

இருள் கவ்விய இரவு
அங்குமிங்கும் வானில்
மின்னிக்கொண்டிருந்தன சில நட்சத்திரங்கள்
மெல்ல மெல்ல அசைந்தாடி வந்தது நிலவு
முழுநிலவாய் இரவின் இருளை நீக்கி
நீலவானில் பௌர்ணமி நிலவாய்
இருட்டில் தெரியாத தடாகம் இப்போது
அழகாய் தெரிந்தது அதில் நிலவின் ஒளியால்
பூத்த அல்லிப்பூக்கள் சிரிக்க
பகலென்றெண்ணி தூக்கத்திலிருந்து
விழித்துக்கொண்ட குயிலொன்று காலை
ராகம் பாட ஆரம்பிக்க பின் இன்னும்
இரவு சாயவில்லை என்று தெளிந்து
தன் கூவலை நிறுத்திக்கொண்டது
வானில் மிதந்து வந்தாலும்
முழுநிலவு அந்த நீல வானிற்கே
அழகு தருவதால் வானத்தில் நிலவழகா
நிலாவால் வானம் அழகானதா
என்பது புரியாமல் போக .....
இருந்த என் நெஞ்சின் இருளைப்போக்க
நிலவாய் அவள் வந்தாள் நிலவே சாட்சியாய்
நிலவின் ஒளியில் நீலவானம் நீல ரத்தினமாய்
ஒளி சிந்த ......என் காதலி நிலவாய் வந்தாள்
ரத்தினமாய் என் மனதில் ஒளி பரப்பி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Oct-19, 3:56 pm)
பார்வை : 135

புதிய படைப்புகள்

மேலே