இயற்கை

இளங்காலை வேளை,
துயிலிருந்து எழுந்த புட்கள்,
குயில் பாட, கிளி கொஞ்சிப்பேச
மைனாக்கள் பாட
மேகம்பூசிய வானம் கண்டு
மகிழ்ந்து வந்து தோகை விரித்து
ஆடும் மயில் கூட்டம்
ஏரியின் பக்கம் சிறிசுகளுக்கு
நடைப் பயில வைக்கும் அன்னக்கூட்டம்
ஐயோ, இது என்ன நான் காண்பது
இயற்கையின் கலைக்கூடம் அல்லவோ
நம்மை வரவேற்கிறது அதிசயிக்க ,
கண்டு களிக்க, களிப்போமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Oct-19, 4:11 pm)
Tanglish : iyarkai
பார்வை : 226

மேலே