சுட்டெரிக்கும் உன் நினைவுகள் 555
என்னுயிரே...
எனக்கு ஆறுதல் சொல்ல
உன் வார்த்தை போதும்...
நீயோ எனக்கு
முட்களை வீசுகிறாய்...
நான் காலமெல்லாம்
வாழ நீ மட்டும் போதும்...
நீயோ
நினைவுகளை
கொடுத்துவிட்டாய்...
இரவில்
நிலவை ரசித்தவன்...
பகலிலும் ரசித்தேன்
நிலவாக உன்னை...
இரவிலும் சுட்டெரிக்கிறாய்
உன் நினைவுகளால்...
உனக்கும்
எனக்கும்
பிரிவில்லை...
என்னுள் உன்
நினைவுகள் இருப்பதால்.....