🌟இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🙏

🌟இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🙏

தித்திக்கும்
தீபாவளி!
பத்திக்கும் பட்டாசு!
திகட்டாத 
ஒரு நாள் கூற்று!
திறலாக குடும்பங்கள்
திரையரங்குக்கு கூட்டமாய்
படையெடுக்க!
சின்னஞ்சிறு குழந்தையும்
போக்குவரத்து அதிகாரியாய்!
சாலையெங்கும் ரசிக்கும்படி அட்டூழியம்!
வீட்டுக்கொரு ஏவுதளம்
சாலையெங்கும் புகைமூட்டம்!
வீதியெங்கும்
பதற்றமாய் பறவைகள்!
தூக்கம் இழந்து
தவிக்க 
மறுநாள் சமாதானம்
செய்யும் பெரியவர்களின்
கா...கா சத்தம்!
இளசுகளுக்கு கொண்டாட்டம்!
பறவைகளுக்கு திண்டாட்டம்!
காற்று ஆகும் மாசு!
கரியாகும் காசு!
நரகாசுரன் இருந்தும்
கொன்றான்!
இறந்தும் கொல்லுகிறான்!
இருந்தும் 
நாம் கொண்டாடுவோம் 
(அடுத்தத் தலைமுறை) தீபாவளி கொண்டாட!
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

அன்புடன் ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (21-Oct-19, 7:57 am)
பார்வை : 71

மேலே