கவிக்குழந்தை

உன் அழகு மதுவை
அதிகமாக உண்டு
மயங்கிக் கிடக்கிறது
எனது பேனா
அதன் வரிக் கால்கள்
எழுந்து நடக்க முடியாமல்
அங்கே ஸ்தம்பித்துக்
கிடக்கின்றன ..
பிரசவம் காண
முடியாமால்
உள் வயிற்றில்
சிக்கித் தடுமாறுகிறது
கவிக்குழந்தை

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (21-Oct-19, 11:21 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 122

மேலே