அறிய முடியாத அரிது

நீராகி நெடிந்தெரியும் நெருப்பாகி
நீலவண்ண அயனமாகி கதிராகி
காரிருள் விலக்கும் அழகு நிலவாகி
ஓரறிவு உள்ள சின்ன உயிராகி

ஓங்காரத்தின் உரிய பொருளாகி
வலியாகி வம்சங்கள் பிறக்க வழியாகி
பம்பரமாய் சுழலும் அப்புவாசி
பாயும் மரக்கலங்கள் ஓடும் புனலாகி

தேனாகி தினமும் மலரும் மலராகி
இரும்பாகி இடர் களையும் மருந்தாகி
எலும்பாகி எங்கும் வாழும் உயிராகி
உணர நினைப் போருக்கு உணர்வாகி

உப்புவாகி உயிர்கள் பெருகும் திரவமாகி
அந்தரமாகி அனைத்தையும் இயக்கும் இயந்திரமாகி
மனமாகி மாயங்கள் நிறைந்த மதியாகி
அண்டங்களாகி அதை இயக்கும் இயக்கமாகி

அழிவாகி அதனால் உருவாகும் பயிராகி
காதலாகி தோல்வியாகி கவலையாகி
பிரிவாகி தெளிவாகி விசாலமாகி புதிராகி
புரிதலாகி உணர்வாகி மணமாகி பிணமாகி

பெரும் பேருடைய அழிவிலா கோவே
அனைத்து உணர்வையும் ஆளும் ஆண்மையே
ஆற்றொன்னா துயரிலும் அன்பு காட்டும் பெண்மையே
ஆறறிவாலும் அறிய இயலா இறையே போற்றினேன் உனை.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Oct-19, 6:35 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 56

மேலே