காதலில் சந்தேகம்

காதலர்களே காதலிக்கும்போது
பல சிக்கல்கள் வந்து சேரலாம்
மனம் தொய்ய வைக்கும் அவிழ்க்க முடியா
முடிச்சுகள்போல் , இவை அனைத்தும்
உங்கள் பொறுமையை சோதிக்கும் முடிச்சுகள்,
இந்த முடிச்சுகள் சிக்கனைத்தையும்
எடுத்துவிட முடியும், இருவர் மனதிலும்
தீர்வு காணும் அவா இருப்பின், ஆயின்
'சந்தேகம்' எனும் முடிச்சு காதலில் இடர்பட்டால்
அது அவிழ்க்க முடியா முடிச்சாகி
காதலை விழுங்கிவிடும் , மாகடலில்
தன் 'உணவை' கக்கவைத்துக்கொள்ளும்
'அக்டோபஸ்' போல .......
சந்தேகம் வாழ்வில் அழிக்கமுடியா 'கான்செர்'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Oct-19, 7:36 am)
Tanglish : kathalil santhegam
பார்வை : 51

மேலே