மண்ணுக்குள்ள போயிடுவோம் - சி எம் ஜேசு

மண்ணுக்குள்ள போயிடுவோம் - சி எம் .ஜேசு
----------- plastic awarnes song -----------

இராகம் : சங்கராபரணம்
தாளம் : ஆதி - sacle D

பல்லவி ;
மண்ணுக்குள்ள போயிடுவோம்
விண்ணுக்குள்ளும் குப்பையிருக்கு
பகுத்துணர்ந்து வாழ்ந்திடுவோம்
பிளாஸ்டிக் பழக்கம் மறந்திடுவோம்

டீ குடிக்க டம்ளர் இருக்கு
தண்ணீர் எடுக்க குடம் இருக்கு
பிளாஸ்டிக் வழக்கம் வந்ததனால்
நிஜங்கள் மறைஞ்சு போச்சு போச்சு

கோரஸ் : ஜிகு ஜிகு ஜிகு ஜிச்சாம் - 3
ஜிச்சாம் இச்சிச்சாம்

சரணம் :
கொட்டாங்குச்சி வச்சு குடிச்சாங்க - அப்போ
இயற்கையா பாத்திரத்தை படைச்சாங்க - அன்று
மண்பாத்திரம் தான் வாழ்வாச்சு - அதுக்கு
கீழடி ஒன்றே சாட்சியாச்சு

கோரஸ் : ஜிகு ஜிகு ஜிகு ஜிச்சாம் - 3
ஜிச்சாம் இச்சிச்சாம்

------------- சி .எம் .ஜேசு ---------- ( மண்ணுக்குள்ள ..

சரணம் :
மஞ்சப்பய கைப்பிடிக்குள் வச்சாங்க - இன்றைக்கு
பிளாஸ்டிக் பயே கதியென்று ஆனாங்க - அன்றைக்கு
வந்தது விளைவுதான் போகுது உயிர்கள் தான்
குப்பையும் கூலமா போனது உலகம் தான்

விட்டுடுவோம் விட்டுடுவோம் பிலாஸ்டிக்க
கட்டிக்குவோம் ஒட்டிக்குவோம் துணி பைய்ய

கோரஸ் : ஜிகு ஜிகு ஜிகு ஜிச்சாம் - 3
ஜிச்சாம் இச்சிச்சாம்

------- சி. எம். ஜேசு ------------- ( மண்ணுக்குள்ள ...

எழுதியவர் : c m jesu prakash (22-Oct-19, 10:09 am)
பார்வை : 61

மேலே