மாட்சிமையான காதல்

மெல்லிய வாசமாய் ஓர் உணர்வு
மெல்லமாய் ஊடுருவி இதயம் அடைய
மென்மையாய் ஆனதடி என் எண்ணம்

வெண்பனித் தூவல் மல்லிகைத் தோட்டத்தை
வெகு சுலபமாய் நனைப்பதைப் போல்
விரைவாய் மென் நினைவால் அமிழ்ந்தேனடி

மனமது மயங்கிய நிலையிலேயே உழன்றதடி
மற்ற பணிகளின் நினைவு கடுகளவும் எழவில்லையே
மாலை வேளையில் விம்மி துடித்தது மென் இதயம்

மருந்துண்ண இது நோயும் இல்லையாமடி
மற்றவரிடம் பகிர்ந்து மறக்க இது நிகழ்வும் இல்லையடி
மாறுபட்ட வலியால் துடித்து இளைக்கின்றேனடி

மாயக்கிளியே உன்னைக் கண்ட உடன்
மாயமாய் போனதடி எல்லாம் மறந்தே போனேன் என்னை
மனதில் வந்தது மாட்சிமையான காதல் காதல் காதலாம்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-Oct-19, 10:53 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 45

மேலே