காதல்

சிவந்த அவள் முகம் தாமரைப்பூ
அதில் வீசும் ஒளியோ பூரண நிலவு
துள்ளும் மீனாய்க் கண்கள்
கோவைப் பழம்போல் இதழ்கள்
யவ்வனம் தந்த கொங்கை இரண்டும்
கோபுர கலசங்கள், வஞ்சி அவள்
இடையோ தாமரைக்கொடி ,சிவந்த
அவள் பாதங்கள் இரண்டும் செந்தாமரையே
அவள் சிரிப்பில் முல்லைப்பூ
அவள் நடந்து வந்தால் அன்னம்போல்
அவள் கோடி இடை அசைவில்
வண்ண மயிலின் சாயல்
அவள் பேசும் மொழியோ இசைத்தமிழ்
அவள் பேச்சே குயிலின் இசைப்போல் குழைவு

ஆம் இவள் கிராமத்து பைங்கிளி
கலப்படம் ஏதுமிலா இயற்கை
எழிலே அவள் எழில் அழகிற்கே ஒரு காவியம்
என் மனதில் வந்தமர்ந்த உயிர் ஓவியம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Oct-19, 1:18 pm)
Tanglish : kaadhal
பார்வை : 105

மேலே