மௌனமாய்

நீலநிற ஆடையில்
வானம்

பச்சைநிற ஆடையில்
பூமி

இடைவெளி அதிகமாக
இருப்பதால்

இருவரும் மௌனமாய்
பார்த்தபடி

யார் முதலில் காதலை
சொல்வதென

என் காதலை சொல்லி
விட்டேன்

மௌனமாய் அவளும்..,

எழுதியவர் : நா.சேகர் (22-Oct-19, 2:13 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mounamaai
பார்வை : 185

மேலே