அவள் திமிர் பிடித்தவள்

அர்ச்சனா நாமம் சொல்லியே வழுக்கைகள் உணவலிக்க

ஆயிரம் கிளிகள் சுற்றி வந்தாலும் காக்கைக்கே முதல் உணவு

இமையழகி இடையழகி கொடியழகி இசையழகி

ஈ டிலா புகழைப் பெற்றாலும்,

உலகெலாம் நம் ஊரென நினைத்த மனது

ஊரெல்லாம் நட்பானது

எற்றி விட தயங்கியதில்லை தான் முன்னேற

ஏற்றி விட்ட ஏணியையும் மிதித்து தள்ளியது கொஞ்சமும் வருத்தமில்லை

ஐயமின்றி ஒரே ஒரு கொள்கை

ஓட்டி உறவாடியவர்களை முழுதும் நம்பியதில்லை

ஓதுவார் காதில் உண்மையை சொன்னதில்லை

அஃதே அவள் ஒரு கேள்விக்குறி.

எழுதியவர் : கவிராஜா (22-Oct-19, 8:51 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 400

மேலே