காதல்

காதல்
உடல்விட்டு உயிர் திண்ணும்
ஊணுண்ணி
உள்ளத்துள் ஊடுருவி
உருக்கிவிடும் அமிலம்
மதி இழந்து நிலைமறக்கும்
பெரும்போதை
கண்டபடி முளைத்துநிற்கும்
நாசகார நச்சு
மனம் விட்டு மனம்பாயும்
நெருப்பாறு
தேன்தடவி விஷமேற்றும்
கூர்முனை அம்பு
எல்லாம் இழந்தும் பெருமைகொள்ளும்
பைத்தியத்தலைமை
உடல்பசியில் இளைப்பாறும்
விசித்திர ஜந்து
நோய்தந்து உருக்குலைக்கும்
பேரமுதம்
தேவதையாய் சிரித்துவரும்
கொள்ளிவாய் பிசாசு
ஆணிவேரது தெரியாத
மாய மரம்
என்னுள்ளும் பயணம் செய்த
பச்சோந்தி
காதல்

எழுதியவர் : Rafiq (22-Oct-19, 10:07 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : kaadhal
பார்வை : 191

மேலே