ஏமாற்றக் கவிதை ‍- 9  

ஏமாற்றக் கவிதை - 9  
====================

முறுக்கு எனக்கு பிடிக்குமென்றேன்
முறுக்கு மீசை பிடிக்கும் என்றாய்..
மீசை வளர்த்து வந்த வேளை
பூசை கொடுத்தே எட்டிப் போனாய்!

லட்டு சுவைக்க ஆசைப்பட்டாய்
தட்டுக் கணக்கில் வேண்டும் என்றாய்..
முட்டி மோதி வாங்கி வந்தேன்
எட்டி உதைத்து எங்கு சென்றாய்?

கடலை மிட்டாயை உண்டபடி
கடலை ரசித்தோம் அன்றொரு நாள்..
விடலை என்றாய் விட்டு விட்டாய்
சுடலை என்றே மனம் சுட்டுவிட்டாய்!

உளுந்த வடையின் பருப்பாயெண்ணி
எனையேன் இப்படி அரைத்து விட்டாய்..
விழுந்த எனக்கு உன்பிடி தேவை
எழுந்து நடமாற உத்தரவு தா!

பாயாசம் உன்னிலை விட்டுவந்து
என்னிலை சேர்ந்தது ஒரு விருந்தில்..
தன்னிலை மறந்தே ஆடினேன் நான்
கண்ணில்லா உன் முன்னே இன்றிருக்கேன்!

கேசரிச் சட்டி ரவையானேன்
உன் வெறுப்பால் என்னைக் கிளராதே..
நேசமும் பாசமும் எங்கே விற்றாய்
பிரிவெனும் விடமதை எப்படிக் கற்றாய்?

பக்கோடா தலையெனவே அழைப்பாய்
எக்கேடோ கெடுவென எங்கு சென்றாய்?
அக்காட்டு புலிகண்டு பயம் போச்சு
முக்காடின் கிலியே நிரந்தரம் ஆச்சு

அல்வா கொடுத்தவள் நீயெனவே
ஒரு நாளும் முறையிட மாட்டேன்டி..
செல்வாக்கு காதலுக்கு உண்டு என்றே
உன் பிரிவே எனக்கு உரைத்ததடி!

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (23-Oct-19, 5:51 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 298

மேலே