என் கனவு காதலன்

விம்மிய மார்பு
திரண்ட புஜங்கள்
நீண்ட வலிய கால்கள்
காலின் முட்டிக்கு கீழ்
நீண்ட ஏறுபோல் கைகள்
நீள உருண்ட உள்ளடங்கிய கண்கள்
தீர்க்கப் பார்வை
நீண்டு அடர்ந்த தலை முடி
அழகிய நாசி
அதன் கீழ் வசீகரிக்கும்
புன்னகைத்த தாங்கிய இதழ்கள்
சிம்மத்தின் இடை
நீண்ட கால்கள்
காலின் முட்டிக்கு கீழ்
வலுவான கைகள்
நீண்ட அழகிய தாமரைப் பாதங்கள்

இப்படி என் கற்பனையில் வளர்த்துக்கொண்டேன்
இவன்தான் என் காதலன் என
இன்னும் என் கண்கள் இவனைக் காணவில்லையே
ஏங்குது என் மனம் காதல் வேண்டி
கிடைப்பானா இவன்.... இல்லை
கன்னியாய்க் காலத்தைக் கழிக்கவா
தெரியாது வாடும் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Oct-19, 1:34 pm)
Tanglish : en kanavu kaadhalan
பார்வை : 75

மேலே