அவள் அழகு

பெண்ணின் அழகிற்கு நான்
எழுதிய, இன்னும் எழுதும்
கவிதைகள் அத்தனையும்
பெண்ணே, உன் அழகைக்கண்டதும்
உரமிலா பயிர்போல் தோன்றின
ஆம் உன்னழகு , அது நான்
கற்பனையில் வடித்த பெண்ணின்
அழகை எல்லாம் தாண்டி
எங்கோ நிற்கின்றது ஒரு தனி
ராகம் பாடி தனிக் கவிதையாய்
நான் எழுதா கவிதையாய்
படைத்த பிரம்மனே உனக்காக
வடித்த கவிதையாய் நீயாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Oct-19, 2:08 pm)
Tanglish : aval alagu
பார்வை : 143

மேலே