ஏழு ரூபாய்

ஏழு ரூபாய் 🤝🙏🏽

ஒக்கி புயல் என்ற
கோர புயல் விஸ்வரூபம் எடுத்து ருத்தரதாண்டவம் ஆடி
அழிசாட்டியம் செய்து
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முழுவதும் கபலிகரம் செய்து எங்கோ சென்றுவிட்டது.

கண்ணீரும் கம்பலையுமாக எங்கள் ஏழை விவசாயிகள், என் மீணவ குடும்பங்கள் செய்வதறியாது, உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஏதும் இன்றி எதிர் கால வாழ்க்கையே கேள்வி குறியாக நடுத்தெருவில் தஞ்சம்.
அச்சத்தின் உச்சம்
சோகத்தின் எல்லை
வாழ்க்கையின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கும் இவர்களுக்கு ரோட்டரி நல்லுள்ளங்கள் நேசக்கரம் நீட்ட முடிவெடுத்தது.

மேடை போட்டு விவசாய பெருமக்கள் வாழ்வுதனை காபாற்ற பச்சை நாடா கையில் எல்லோரும் அனிவோம்.
ஒரு பச்சை நாடா
ரூபாய் பத்து
ஒருவர் எவ்வளவு நாடா
வேண்டுமெனறாலும் வாங்கலாம்
விலை சம்பரதாயத்துக்கு ஒரு நாடா ரூபாய் பத்து
வாங்குபவர் எவ்வளவு பணம் கொடுத்தும் வாங்கலாம்.
அறிவிப்பு தான் தாமதம்
மள,மளவென விற்ற தீர்ந்தது பச்சை நாடா
சிலர் பத்தாயிரம் கொடுத்து வாங்கினர்
சிலர் ஒரு
லட்சம் கொடுத்து வாங்கினர்
அவரவர் வசதிக்கு ஏற்ப வாங்கிய பச்சை நாடவை கையில் கட்டி கொண்டனர்.
ஏறகுறைய விற்று தீர்கும் தருவாயில்,
ஏழை சிறுவன் ஒருவன் மேடை ஏறி ஒரு பச்சை நாடா கேட்டான்.
அவனிடம் ஒரு நாடா கொடுக்கப்பட்டது.
சிறுவன் தயங்கி,தயங்கி தன் கால்சட்டையிலிருந்து ரூபாய் எடுத்து தன்னிடம் ஏழு ரூபாய் மட்டும் தான் உள்ளது, நாளை காலையில் நிச்சயம் மிச்சம் மூன்று ரூபாய் தருகிறேன் என்றான்.
பராவாயில்லை நீ வாங்கியதே பெரும் செயல் என்று கொடுத்தவர் பாராட்ட , அவன், அந்த சிறுவன் மேடையில் இருந்து இறங்கிவிட்டான்.

அடுத்த நாள் விழாவில்
பச்சை நாடா மூலம் விற்ற, பெற்ற பணத்தை புயலில் பாதித்த மக்களுக்கு பகுத்து, தொகுத்து, கொடுக்க தயார் நிலையில் இருந்தனர் ஏற்பாடு குழுவினர்.

விழா ஆரம்பம் ஆவதற்கு முன்
கட,கட வென மேடை ஏறிய சிறுவன் மூன்று ரூபாய் மிச்ச பணத்தை அந்த உரியவரிடம் கொடுத்தான். பெற்றவர் ஆடிபோய்விட்டார் .
மனித நேயம், மனிதாபிமானம், மனிதசங்கிலி
இன்னும் உயிருடன் தான் இருக்கிறது.
இந்த சிறுவன் அதற்கு சாட்சி.

-பாலு.

எழுதியவர் : பாலு (23-Oct-19, 3:06 pm)
சேர்த்தது : balu
Tanglish : ezhu rupai
பார்வை : 200

மேலே