அரிதாரம்

முகம் காட்டும் கண்ணாடியில்

முகத்தை மட்டும் பார்க்காது

நாள் தவறாது என் கேள்வி

நான் யார் என என்னையே
கேட்க

உண்மை தெரிந்தது எனக்கு

அவசியமற்றுப் போன அரிதாரம்

நடிப்பில்லா நிர்வாணம்

எழுதியவர் : நா.சேகர் (23-Oct-19, 5:36 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aritharam
பார்வை : 341

மேலே