காதல்

அவள், அந்த அழகி
பார்த்தவுடன் என்
மனதைக் கிள்ளியவள்
அவள் அங்கே
நான் இங்கே - அவள் பார்வை
இப்போது என் மீது
என் விழிகளின் மீது
ஒரு கொடி மின்னல் துளைப்பதுபோல்
என் விழிகளின் மீது
அப்படியே என்னை அறியாமல்
கண் மூடினேன் .... அந்த மின்னல்
என்னுள்ளத்தை துளைத்ததுபோல்
உணர்ந்தேன் உடம்பு சிலு சிலுக்க ,
ஓ, இதுதான் காதலா .......
புரிந்தது இப்போது
காமன் விடுக்கும் அம்பிற்கு
காமனைப்போல் உரு ஏதும் இல்லைபோல
என் மனம் இப்போது அவள்
மனதை நாடி ஏங்குதே
பாவி மனம் என் செய்வேன் ...
என் வேதனை அவளுக்கு புரியுமா
இல்லை அவளும் என்னைப்போல்
எனக்காக ஏங்குகிறாளோ...
காதல் படுத்தும் பாடு....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Oct-19, 5:55 pm)
Tanglish : kaadhal
பார்வை : 190

மேலே