அடர்ந்த ரோம மார்பால்

மழை பொழியும் காலத்தில்
துளிர் விடும் விதையைப் போலே
மனம் என்னும் குகையினுள்ளே
மாயமாக நுழைந்தவனே

மடைத் திறந்த வெள்ளம் போலே
மனதினுள்ளே மகிழ்ச்சியடா
மகத்தான நிலையை நானும்
அடைந்தது போல் எழுச்சியடா

தினமும் உன்னைக் காண வேண்டி
தினவெடுத்து மனம் துடிக்குதடா
கோடையில் கொட்டும் மழையைக் கண்டு
குதுகலிக்கும் புஞ்சை நிலமாய் ஆனேன்

அழகாலே ஆன பெண் உடலும்
அணைத்து மகிழ அழைக்குது உன்னை
அடர்ந்த ரோமம் கொண்ட மார்பால்
அழுத்தி என்னை அகங்குளிர்வாயோ

செழித்துக் கனிந்த மாம்பழத்தில்
சுவைமிகுந்த தேனைக் குழைத்து
தேனிலவில் சாப்பிட வேண்டும்
தேடும் என்னைக் கரம் கொள்வாயோ.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-Oct-19, 9:01 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 763

மேலே