கருப்புப் பெண்❤ இரவு

(இரவு)கருப்புப் பெண் காதல்
வயப்பட்டு விட்டாலோ
அகலாமல் என்னையே
சுற்றியுள்ளால்..

நிலா,நட்சத்திரங்கள்
அணிந்து அலங்கார
பெண்ணாக நெருங்குகிறாள்

குளிர் காற்றை
காதல் பரிசாக
என் மீது தூவி விடுகிறாள்

மரங்களுக்கு முத்தம் கூவி
இசையமைக்க ஏவுகிறாள்
என்னை தாலாட்டுவதற்கு...

காதல் தினையை
கனவிலும் தெளிக்கிறாள்
கனிந்து விடமாட்டானா என்று....

(இஷான்)

எழுதியவர் : இஷான் (24-Oct-19, 10:50 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 201

மேலே