கற்று

எனக்கு கிடைக்கவில்லை
வறுமை விரட்டியது

அருகில் வராதேயென

வெகுதூரம் வந்துவிட்டேன்
இருந்தும்

தொடர்கிறது வறுமை
ஆனாலும்

ஓடாது உனக்காக

வறுமையை எதிர்த்துநின்று
உனக்குத் தருகிறேன்

எனக்கு கிடைக்காததை

நீயாவது கிடைத்ததைப்
பெற்று

உயரப்பார் உன் சந்ததியாவது

வறுமை காணாது வளரட்டும்

நீ வளர்வதை மட்டுமல்ல

நீ உயர்வதையும் காண ஆசை

நிறைவேற்றிவை என் செல்லமே

எனக்கு கிடைக்காத கல்வியை
நீ கற்று

எழுதியவர் : நா.சேகர் (25-Oct-19, 5:39 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : katru
பார்வை : 2122

மேலே