ஹாருகி முரகாமியின் திவ்ய தேசங்கள்

_____________________________

இசை...

ஒரு வரம்புக்குள்
மீண்டும் தத்தளிக்கிறது.
நுரை பொங்கும்
மகிழ்ச்சியில் திணறுகிறது.

காடு என்ற சொல்லுக்குள்
புதினம் மிகுந்த துளையை
தீண்டி கண்டறிகிறது.

ஓட்டமும் துள்ளலும் கொண்டு
பரபரப்பை இழக்கிறது.

மெய்யாக அதை
நான் நேசிக்கிறேன்.

திருவிழாக்காலத்தில் நான்
புதைந்து கொள்ளும் இருட்டில்
இசை வானம்பாடியாக
காட்சியளிக்கிறது.

ஓடையின் திருப்பத்தில்
காட்டு வாத்துக்களுடன்
அந்தியை கழிக்கும்
அந்த ஸ்வரங்களுக்குள்

யாரும் பார்க்க விரும்பாதவனாய்
ஹாருகி முரகாமி செல்கிறான்.

ஒரு கனவையோ
பதம் பிடிக்காத சொல்லையோ
ஏவுகணைபோல்
நிரப்பி கொண்டு அலையும்
எனக்குள்ளிருந்து அவன்
விடைபெறும் நேரத்தில்
நான் இசையை
ரசிக்க விரும்புகிறேன்.

காடு படர்ந்த நாளொன்றில்.

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

எழுதியவர் : ஸ்பரிசன் (26-Oct-19, 10:09 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 78

மேலே