மீண்டு வா சுர்ஜித்

ஓடி விளையாடாதே கண்ணா
ஓட்டை தெரியாது கண்ணா
அம்மா இருக்கிறேன் கண்ணா
அச்சம் கொள்ளாதே கண்ணா

ஆழம் போகாதே கண்ணா
ஆபத்து இருக்குது கண்ணா
பாழும் குழியிது கண்ணா
பாதை அங்கில்லை கண்ணா

முயற்சி விடாதே கண்ணா
முன்னேறி விடலாம் கண்ணா
அயர்ச்சி கொள்ளாதே கண்ணா
அசையாமல் இருந்திடு கண்ணா

ஆற தழுவனும் கண்ணா
ஆவி துடிக்குது கண்ணா
கதறி அழுதேன் கண்ணா
காணத் தவித்தேன் கண்ணா

பசித்து இளைத்தாயோ கண்ணா
பதறி தவித்தாயோ கண்ணா
தூக்கம் தொலைத்தாயோ கண்ணா
தூறலில் நினைந்தாயோ கண்ணா

துணிவு கொள் கண்ணா
துவண்டு போகாதே கண்ணா
சரித்திரம் பேசும் கண்ணா
சகாப்தம் படைத்திடு கண்ணா

மீதமிருப்பது நீதானே கண்ணா
மீண்டு வந்திடு கண்ணா
காயம் ஆறனும் கண்ணா
காலம் ஆற்றிடும் கண்ணா

வேண்டாத தெய்வமில்லை கண்ணா
வேண்டுவதெல்லாம் நீயே கண்ணா
வாழ்க்கை எனக்கேது கண்ணா
வாழ்வே நீதான் கண்ணா

எழுதியவர் : அருண்மொழி (27-Oct-19, 11:33 pm)
சேர்த்தது : அருண்மொழி
பார்வை : 136

மேலே