எல்லா உயிர்களுக்கும் தாய்க்கு ஒப்பானவன் – ஏலாதி 6

நேரிசை வெண்பா

நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையே
பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை
வேயன்ன தோளாய்! இவையுடையான் பல்லுயிர்க்கும்
தாயன்ன னென்னத் தகும். 6 ஏலாதி

பொருளுரை:

மூங்கிலையொத்த தோள்களையுடைய பெண்ணே!

நெஞ்சடக்கம் உடைமை, நல்லியல்பு உடைமை, வறியார்க்கு ஒன்று கொடுத்தல், பிறர் தனக்குத் தீங்கு செய்யும் பொழுது பொறுத்தல், பொய் கூறாமை, ஊனுண்ணுவதில் மறுத்தல் என்ற ஆறு இயல்புகளையுடையவன் பலவகைப்பட்ட எல்லா உயிர்களுக்கும் தாயையொத்தவன் என்று புகழ்தற்குரியவன் ஆவான்.


கருத்து:

நிறையுடைமை முதலியன உடையவன் பல்லுயிர்கட்கும் நன்மை செய்பவ னாவான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Oct-19, 8:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 127

சிறந்த கட்டுரைகள்

மேலே