அவள் இதழ்கள்

இதன் அழகை வருணிக்க
சொற்களில் புதைந்திருக்கும்
உரிய சொல்லைத்தேட கவிஞரை
எப்போதும் தூண்டுவது இது.....
இதுவே அலர்ந்த மலராய்
காதலனுக்கு அன்பு பரிசளிப்பது
இது.... முத்தான முத்தாய்
வாழ்நாள் முழுவதும் அவன்
நெஞ்சில் குடிகொண்ட சின்னம் இது
இதுதான் நான் விரும்பும் அவள்
மலர் இதழ்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Oct-19, 7:57 pm)
Tanglish : aval ithalkal
பார்வை : 273

மேலே