பிரச்சாரம்✊

இன்று ஆசை மயிர்
கொட்டிப் பேசுகிறாய்
நாளை எங்கள் அங்கலாய்ப்புக்கு
வழுக்கை போட மாட்டாயே...

விஞ்ஞாபனத்தில் சேவை
கட்டடம் இன்று கட்டுகிறாய்
நாளை அதை இடித்து நொறுக்கி
விடமாட்டாயே...

பதவிப் பொட்டு நாங்கள்
வைத்த பிறகு கசக்கி
விடமாட்டாயே...

அதிகாரக் காற்று சுவாசித்த
பின்பு எங்களை ஊதி
அனைத்து விடமாட்டாயே...

ஒட்டு மொத்த ரேகையின் உயிரை
கருக்கலைப்பு செய்து விடமாட்டாயே...

இஷான்🍃

எழுதியவர் : இஷான்🍃 (3-Nov-19, 7:17 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 1331

மேலே