ஜீவகாருண்யம்

ஆதி மனிதன்
மிருகங்களோடு மிருகமாய்
கானகத்தில் திரிந்துவந்தான்
ஏதேதோ கிடைத்ததை எல்லாம்
உண்டு உயிர் வாழ்ந்தான்
கிழங்கு, காய்,கனி , இல்லை
என்ற இவை எல்லாம் உண்டான்
மிருகம் மற்ற மிருகத்தை வீழ்த்தி
அதையே கடித்து குதறி
உணவாய் உண்பதையும் பார்த்தான்
தானும் விலங்கினங்களை வேட்டையாட
வேட்டையில் மாய்ந்த விலங்கை
உணவாய் உண்ண பழக
மனிதனுக்கு புலால் உண்ணும் பழக்கம் தொடக்கம்
மிருகம் வேறு..... மனிதன் வேறு ....
மனிதன் ஆறறிவு உள்ளவன்.........
பகுத்தறிவு இவன் தனி சிறப்பு....
பகுத்து உணர்தல் ......
சரி , மிருகத்திற்கு பகுத்தறிவு கிடையாது
ஒன்றை ஒன்று அடித்து கொள்கிறது
அடித்து கொன்று ... கொன்றதை உண்கிறது
ஆதியிலிருந்து இதைத்தான் அவை செய்துகொண்டிருக்கின்றன
மிருகங்கள் மனா அளவில் பரிணாம வளர்ச்சி
காணாதவை.....
மனிதன்....? ஆதி மனிதன் பரிணாம வளர்ச்சியில்
வளர்ந்து.... இன்னும் வளர்கிறான் புத்தியில்
பூமியை விட்டு ....வேறு கிரஹங்களில் குடியேறும்
அளவிற்கு....

மனிதன் நாகரீகமானவன் ......
பிறர் செய்யும் குற்றங்களுக்கு நீதி தேடுபவன்
மனிதன் மனிதனைத் தாக்க... அது குற்றம்
தண்டனை உண்டு...... மனிதன் மனிதனை அடித்து
கொன்றால்.... அது கொலை.... மரண தண்டனை...

ஆனால் ஆதி காலம் முதல் இன்று வரை
மனிதன், விலங்குகளை மாய்த்து கொண்டே இருக்கிறான்
தன் அன்றாட உணவிற்காக .....
பற்களின் அமைப்புப்படி இயற்கை மனிதனை
ஒரு புலால் உண்ணா பிறவியாய்த்தான் சிருஷ்டிக்க
இவன் அதை மீறி புலால் உண்கிறான்
உண்ண விலங்கு, பறவை எல்லாம் கொல்கிறான்
நீதி மன்றத்தில் , மனிதன் மனிதனை வீழ்த்த
அது கொலை...... தண்டனை...... தூக்கு
ஆனால் இவன் ஓயாது தினமும் செய்யும்
மிருக வதைக்கு ..... நீதி..... யார் தருவார்?
யானை, குதிரை, ஆடு, மாடு.... இவைகள்
சாக பட்சிகள்..... பற்கள் அமைப்பில்
இவைகள் புலால் தின்பதில்லை
நாம்..... ???????

ஜீவகாருண்யம் தேடி போவோம்
பதில் கிடைக்கும் ......
முயலலாம்......
தெரிந்தே தவறு செய்தல் தவிர்க்கலாம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Nov-19, 8:52 am)
பார்வை : 94

மேலே