அவள் ஒரு கேள்விக்குறி - 11

திடீரென்று கருப்பு காக்காவான அவனிடம் அதிக பாசமழை பொழிந்தாள் அர்ச்சனா
அவனுடன் சாப்பிட ஹோட்டலுக்கு செல்வது , டீ அருந்த மணிக்கணக்கில் செல்வது
சில சமயம் இருவரும் ஒன்றாக விடுமுறை எடுத்து சினிமா பீச் செல்வதாக பலர் கேள்விப்பட்டனர்.
இவள் எதற்காக இப்படி செய்கிறாள் என்பது எல்லோருக்கும் ஒரு புரியாத புதிர்
இவள் ஐம்பது ஆயிரம் சம்பளம் வாங்குபவள். அவன் ஐயாயிரம் வாங்குபவன் .
திருமணமானவன்.
ஏன் தங்க சிலை போல் இருப்பவள் கருப்பு நிலக்கரியை பிடித்து இருக்கிறாள்
ஒன்றும் புரியவில்லையே
ஆயிரம் கிளிகள் அவளை சுற்றி திரிந்தது . அவள் கண்டு கொள்ளவே இல்லை.
அந்த கருப்பு காக்கா ஸ்ருதியின் நெருங்கிய நண்பன்.அவளுக்கு தெரியாமல் அவளைக் கவுக்கவா ?
அவள் இடத்தை நிர்ப்பவா ?
தெரியவில்லை
எங்கோ ஜதி போடுகிறாள்
வேறு துறையில் ஏதோ பெரிய வேளைக்கு வட்டமிடுகிறாள்.
அதற்கு காக்கா எப்படி உதவி செய்யும்.
யாருக்கும் புரியாத புதிர். பொறுத்திருந்து பார்ப்போம்.
ஸ்ருதிக்கு திடீரென்று மதிப்பு கொடுப்பதை நிறுத்தி விட்டாள்
இவளும் ஸ்ருதியும் சண்டை போட்டனர்.
ஊரே வேடிக்கை பார்த்தது. எதற்கென்று தெரியாது.
ஐம்பது வயது வாத்தியாருக்கு கிடைக்காத வேலை முப்பது வயது அர்ச்சனாவுக்கு கிடைத்தது.
ஊரே ஆச்சர்யப்பட்டது.
நயவஞ்சகம் அழகியவளை வேளைக்கு எடுத்துக் கொண்டான் என்றது.
ஆனால் காக்காவை வைத்து நெடுமாறனை நேர் கொண்டையாள் மடக்கி விட்டாள் என்பது யாருக்குத் தெரியும் .

எழுதியவர் : கவிராஜா (5-Nov-19, 9:42 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 152

புதிய படைப்புகள்

மேலே