94 அவன் - ‍‍ 03

94 அவன் அவள் காதல் ‍‍ - 03
========================
#அவன்_03
==========

ஆரம்பமானது வகுப்பு..
உனக்கு முதல் இருக்கை..
எனக்கு கடைசி..
உனது ஒவ்வொரு திருப்பமும்
எனது விருப்பமாய் போனது..
நீ வரும் நாட்களானது தீபாவளி..
வராத நாட்களோ தீரா'வலி'..
அதுவரை தைரியமாகப் பேசியவன்
உனைக்கண்டு திக்க ஆரம்பித்தேன்..
சில நேரம் விக்கவும் ஆரம்பித்தேன்..
நான் உனை அழைக்கும் தருணங்களை
காதில் வாங்கிக்கொண்டாயாவெனத் தெரியாது..
ஆனால் காதல் வாங்கிக்கொண்டாய்..

#அ_வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (5-Nov-19, 10:56 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 1293

மேலே