அனுபவங்கள்

அனுபவங்கள்

நீண்ட நாள்
ஊறி கிடந்த
நினைவுகளை அலசி
துவைத்து காய
வைத்து பார்த்தேன்.
அதற்குள் ஆயிரம்
கிழிசல்கள்
இத்தனை கிழிசல்களை
வைத்து தான் இத்தனை
காலம் ஓட்டியிருக்கிறேன்

கிழிசல்கள் என்பது
அனுபவங்கள் என்று
உணர்ந்து கொண்ட்தால்

கிழிசல்கள் தவிர்த்து
மிச்சம் இருப்பதை வைத்து
வாழ்க்கையை ஓட்டிகொள்ளலாம்

இறைவனோ இயற்கையோ
பிறக்கும்போது
ஒரு முறைதான்
கொடுக்கிறான்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-Nov-19, 9:26 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : anubavangal
பார்வை : 266

மேலே