பெண்மனசு யாருக்குப்புரியும்

-----------------------------------------

அறியும் வயதுமுதல் ஆரம்பிக்கும்
அலைகடலென தேங்கி நிற்கும் /


சுயநலம் துளியின்றித் தெளிந்திருக்கும்
சுற்றம் உற்றங்களை நினைத்திருக்கும் /


குடும்பத்தில் குதூகலம் நிலைத்திருக்க
குறையின்றி வாழ்ந்திடவும் வழிதேடும் /


பாவையவள் பார்வையில் பாசம்வடியும்
பாழ்மனசில் ஏக்கங்கள் நிறைந்திருக்கும் /


சுற்றியுள்ளோர் குறைபலக் கூறினாலும்
சுழல்காற்றாய் வேகமுடன் உழைத்திடும் /


ஆனாலும் பெண்மனசு யாருக்குப்புரியும்
ஆண்களுக்கு அடிமையெனவே பேசும் !பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (6-Nov-19, 2:53 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 39

மேலே