அவள் கேட்ட அறிவுஜீவிதக் கேள்வி

நிலா வானின் கீழ்
தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது
களங்கமுள்ள நிலா தூண்டும்
காதலும் கவிதையும்
தூய்மையானதாக இருக்க முடியுமா
என்று அறிவு ஜீவிதமான ஒரு கேள்வியைக் கேட்டாள் !
பாலுடன் சேர்ந்த டீ சாறில்
உருவாகும் தேநீரை
களங்கமுள்ள பால் என்று சொல்ல வேண்டுமா
அல்லது சுவையான தேநீர் என்று அருந்த வேண்டுமா
என்று எதிர்க் கேள்வி கேட்டேன்
அவள் குபீரென்று சிரித்ததில்
வாயிலிருந்து கொப்பளித்த தேநீர்
என் வெள்ளை உடையை எல்லாம்
தேநீர் கறை ஆக்கியது
இனி தூயவன் லாண்ட்ரிக் கடைக்காரம்தான் என்றேன்
மீண்டும் சிரித்தாள்
இன்னும் ரெண்டு டீ போடவா என்று கேட்டான் டீக்கடைக்காரன்
பார் என்ன கேட்கிறான் பாலைக் களங்கமாக்கும் தொழில் புரிபவன்
என்றேன்
மறுபடியும் சிரித்தாள் ,,,புரை ஏறிக்கொண்டது .தலையை தட்டினேன்
தோற்றமா தீர்மானிக்கிறது தூய்மையை ?

எழுதியவர் : கவின் சாரலன் (6-Nov-19, 11:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே