அவள் அழகு

அழகே உருவான என்னவளை
தராசின் ஒரு பக்கம் குந்த வைத்தேன்
மறுபக்கம் நான் அவள் அழகை வருணித்த
கவிதைக்கு கிறுக்கலாம் பக்கங்களை
அடுக்கி அடுக்கி வைத்தேன்
என் கவிதைகள் வான் நோக்கி ...... ஏற
அவள், அழகி அவள் ..இல்லை அவள் அழகு
தரையை நோக்கி......
வெட்கத்தில் தலை குனிந்தேன் நான்...
என் கவிதைகளே என்னை ஏளனமாய்ப்
பார்ப்பதுபோல் .... உணர்ந்தேன்.. நான்
வெற்றிப் புன்னகை அவள் இதழ்களில்
என் தோல்வியை உணர்ந்து கூனி குறுகி நான்..
அவளோ, அத்தான் இந்த என் முகத்தில்
நீ காணும் அழகு, நீ தந்த காதல் ஒளியால் தான்
நீ தன்னொளி வீசும் மதி, நான் உன் ஒளியில்
ஒளிரும் குமுதமலர்.... நீ என்றும் என் வீரன்...
இதை எண்ணித்தான் உன் கவிதை வரிகள்
வான் நோக்கி போயிருக்க வேண்டும் ....
என் அழகோ தரை நோக்கி..... என்றால்
என்ன மாண்பேன் இதை...

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (7-Nov-19, 7:56 pm)
Tanglish : aval alagu
பார்வை : 494

மேலே