காதல் சொல்ல வந்தேன் -13

காதல் சொல்ல வந்தேன்-13

உனக்கு தெரியாமல் பார்த்து
ரசிப்பதும்

நீயறியாது பின் தொடர்வதும்
எனக்கு

தினசரி வேளையாகி விட

உன்னுடைய செயல்பாடுகள்
அத்துபடியாகிபோனது

ஓரிருமுறை நீ பார்த்தாலும்
பார்க்காது நகர

உன் பார்வையில் சந்தேகம்
உணர

தயங்கினேன் உன்னை தொடர

செயல்பாடுகளில் தடுமாற்றம்
புதுஅனுபவம்

என் இயக்கம் எனக்கு எதிராக

என்னை இயக்கும் பொறுப்பு
நீ ஏற்க

கண்மூடி உன்னை தொடர்ந்தேன்

காரணம் உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்

எழுதியவர் : நா.சேகர் (9-Nov-19, 4:30 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 209

மேலே