மருத்துவ வெண்பா – ஊற்று நீர் - பாடல் 38

நேரிசை வெண்பா

ஊற்றுநீர் பித்தம் ஒழிக்கும் இனிப்பாகும்
ஆற்றிவிடுந் தாகத்தை யப்பொழுதே - கூற்றுவிழிக்
கொம்ப ரிடையாய்! குணாகுணங்க ளைத்தெளிவாய்
நம்பியுல கோரறிய நாட்டு. 38 தேரையர்

பொருளுரை: கொல்லும் விழிகளையும், கொம்பு போல மெலிந்த யிடையினையும் உடைய பெண்ணே! ஊற்று நீரை அருந்துவதால் பித்தத்தை ஒழிக்கும்; இனிப்பாகவும் இருக்கும்; குடித்த பொழுதே தாகத்தையும் தணிக்கும் என்பதை ஊற்று நீரின் குணங்களைத் தெளிவாய் நம்பி உலகினர் அறியும்படி சொல்லி நிலை நாட்டுவாய்’ என்கிறார் தேரையர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Nov-19, 9:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

சிறந்த கட்டுரைகள்

மேலே