மருத்துவ வெண்பா – பேரீச்சம்பழம் - பாடல் 40

பேரீச்சை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் பொதிந்த கனியாகும். சீரான ஒவ்வொருவரும் உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் அவசியம் பேரீச்சை உண்ண வேண்டும். 100 கிராம் பேரீச்சையில் 0.9 மி.கி இரும்புச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் ஹிமோகுளோபினில் சேர்ந்து, இரத்தம் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்வதில் பங்கேற்கிறது.

நேரிசை வெண்பா

பேரீந் தெனும்கனிக்குப் பித்தமத மூர்ச்சைசுர
நீரார்ந்த வைய நெடுந்தாகம் – பேரா
விரத்தபித்த நீரிழிவி ளைப்பும் அரோசி
உரத்தமலக் கட்டுமறும் ஓர். 40

குணம்:

’பேரீச்சைக் கனியை உண்பவர்களுக்கு பித்தத்தினால் ஏற்படும் கிறுகிறுப்பு, மயக்கம், சுரத்தினால் ஏற்படும் வியர்வையோடு கூடிய மிகுந்த தாகம், இரத்தம் மாசுபடுதலால் வரும் நீரிழிவு, உடல் இளைப்பு, மலக்கட்டு ஆகிய துன்பங்கள் அற்றுப் போகுமென்று அறிந்து கொள்’ எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Nov-19, 10:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 78

சிறந்த கட்டுரைகள்

மேலே