புன்னகை முத்துக்கள்

அழகுச் சாகரம் எங்கும்
நுரை தள்ள வசீகர அலை வந்து
என்னுடலெங்கும் வீசியது
அது இரண்டாவது சந்திப்பு
எனைக் கண்டதும் வட்ட
நிலா முகம் இதழ் விரித்தது
புன்னகை முத்துக்கள் நிலத்தில்
எங்கும் சிந்தித் சிதறின
சேகரித்து மாலை கோர்க்க
அருகில் ஓடோடிச் சென்றேன்
முல்லை மலர் வாசம் எனது
நாசித் துவாரத்தில் உள்நுழைந்து
உச்சியை மயக்க பேச்சின்றி மூச்சு முட்ட என்னை மறந்து நின்றேன்

எழுதியவர் : ala ali (10-Nov-19, 11:12 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : punnakai muthukkal
பார்வை : 415

மேலே