தொழிலாளியும் தொழிலாளர் கல்வியும்

தன்னிலை அறிய வைத்திடுமாம்,
தயக்கங்கள் போகச் செய்திடுமாம்,
தலைமைப் பண்பை வளர்த்திடுமாம்,
தமக்கான இலட்சியத்தை உணர்த்திடுமாம்,

நிறுவன அறிவை ஊற்றிடுமாம்,
நித்தமும் தேடலை உருவாக்கிடுமாம்,
எதிர்மறை எண்ணத்தைக் களைந்திடுமாம்,
தலைமுறை மாற்றத்தைத் தந்திடுமாம்,

தொழிலாளர் கல்வி அடித்தளமாம்,
தொழிலாளிக்கு அதுவே ஆதாரமாம்,
அஃதே நிறுவனத்திற்கு பிரதானமாம்,
இஃதே முன்னேற்றத்திற்கு மூலதாரமாம்.

தொழிலாளர் கல்வி அதனை கற்போம் விரும்பி,
தொழிலக பணியில் அதனை செயல்படுத்துவோம் அரும்பி.

எழுதியவர் : ஜெ தனபால் (10-Nov-19, 9:43 pm)
சேர்த்தது : ஜெ தனபால்
பார்வை : 66

மேலே