என்றும் பெண்மை

கருவில் இருக்கும் கணங்களிலே பல இன்னல்களை பார்த்தவள் ...
தாய்ப்பால் தவிர கள்ளிப்பால் முதற்கொண்டு பார்த்தவள்...
மகளை பிறந்து மானுடப் பிறப்பிற்கு பெருமை சேர்த்தவள்...
பருவம் அடைந்து உயிருக்கு உயிர் கொடுக்க ஆயத்தம் ஆனவள் ...

கல்லூரி காலங்களில் வசந்தத்தை தூநீங்கும் தந்தவள்...
காலையில் பூக்கும் மலர்களுக்கு அவசியத்தை அளித்தவள் ...
கார்மழை பொழிந்திடும் காரணமானவன் ...

கலைப் பூசும் சித்திரம் அவள் ...
விடையறியா விசித்திரம் அவள் ...
பிறப்பிலேயே இரு வீடுகள் கொண்டவள் ...
வயது எட்டியதோ இல்லையோ ஆனாலும் மணமுடித்து சென்றவள் ...

கணவனின் கரம் பிடித்து காரிகையாய் நின்றவள் ...
சினம் கொள்ளுகையில் கொற்றவையாய் கொன்றவன் ...
உறவின் சான்றை வயிற்றில் கரு சுமந்தவள் ...
நாற்பது வாரம் இமைக்காமல் உயிர் காத்தவள் ...

பிரசவத்தின் அரும்பேர் வலி பொறுத்தவள் ...
பொறுத்திருந்து நன்னுயிர் ஈன்றவள் ...

மழலை கொஞ்சி மகிழ்ந்தவள் ...
பேசும் மொழி கேட்டு நெகிழ்ந்தவள் ...
ரத்தம் முறித்து பசி தீர்த்தவள் ...
உளறும் மொழி கேட்டு சிலிர்த்தவள் ...

மழையோடு தலை நனைத்தாள்
முந்தானை கொண்டு துவட்டியவள் ...
பிழையோடு முன் நின்றாள்
தன் விழியாலே மிரட்டியவள் ...

மாலை நேர உறக்கம் பொது மடி தந்தவள் ...
அஞ்சறை பெட்டிக்குள் ஆயிரம் சுவை கொண்டவள் ...
தனக்கென்று சமைக்காதவள் ...
உடமை ஏதும் கொள்ளாதவள் ...

அவள் ,
உலகத்தின் தொடக்கம்
அண்டத்தின் முற்றுப்புள்ளி
ஆதி அந்தம் உலகின்
அதிசய பிம்பம்

அவள்,
அன்னை
தங்கை
தமக்கை
தோழி என பரிமாணங்களை கொண்டவள் !!!
பெண் ...

எழுதியவர் : கா.மணிகண்டன் (10-Nov-19, 10:48 pm)
சேர்த்தது : மணி ராக்ஸ்
பார்வை : 2371

மேலே