உன்னால் முடியும்

உன்னால் முடியும் . ..

நினைத்ததை முடிப்பவன் நீயே
நிஜமாய் உழைத்தால் அந்த
இமயமும் உனக்கு கீழே
விழுந்தால் விருட்சமாய் விழுந்திடு
உயர்ந்தால் கதிராய் நீ எழுந்திடு !

மண்ணைப்பிளக்கும் விதையாவோம் - நாம்
விண்ணில் உலவும் நிலவாவோம்
எண்ணும் எழுத்தும் நன்றாய் படித்து
எதிர்வரும் தடைகளை நாளுமுடைத்து
வெற்றிப்பாதையில் வலம் வருவோம் !

படித்ததை எல்லாம் மனதில் வைப்போம்
பல பட்டங்கள் பெற்று பார் சிரிப்போம்
புரட்சியினால் புது புவியமைப்போம்
புன்னகையாலே நாமதை அளப்போம்

வீட்டில் பூச்சிகள் இல்லை - நாமே
விண்ணொளிறும் விண்மீன்கள் தானே
விதியினை மாற்றி எழுதிடுவோம் - நாம்
விண்ணையே விரலுக்குள் சுழற்றிடுவோம் !
இவன் மு. ஏழுமலை .

எழுதியவர் : மு. ஏழுமலை (11-Nov-19, 3:14 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : unnaal mudiyum
பார்வை : 374

மேலே