தன் நம்பிக்கை கொள்

தன் நம்பிக்கை கொள்
தன் நம்பிக்கை கொண்டிடு தம்பி - நாளும்
நடைபோடு அதை நம்பி
நாடிவரும் வெற்றி உன்னை விரும்பி
நானிலம் போற்றும் உன்னை திரும்பி

கையின்றி வரைபவர் உண்டு
காலின்றி நடப்பவர் உண்டு
கண்ணின்றி காண்பவரும் உண்டு
காற்றை சுவாசித்து மட்டும்
வாழ்வதில்லை - தன்னம்பிக்கை
கொள்பவன் தாழ்வதுமில்லை

தும்பிக்கை கொண்ட யானையை பாரு
நம்பிக்கையோடு நடைபோடுது பாரு
தன்னம்பிக்கை விதை நீயும் போடு
தம்பி நாளுமதில் கலந்து பண்பாடு
உயர்வு வரும் உன்னோடு - இந்த
உலகம் வரும் உன் பின்னோடு

உழைப்பிற்கு உண்டு உயர்வு - உன்
உறுதிக்கு இல்லை என்றும் தாழ்வு
தம்பி சிந்தித்து நீயும் செயல்படு - உன்னை
நிந்தித்த துயர் நீங்கும்
மகிழ்ந்து விளையாடு !
இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (11-Nov-19, 3:26 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : dhan nambikkai kol
பார்வை : 205

மேலே