ஜாதி

விலங்கினங்களில் மனிதன்
உயர்வு தாழ்வு காண்கின்றான்
நாய்,பன்றி,ஆடு, மாடு, குதிரை
இந்த ';வீட்டுவிலங்கினாங்க l '
ஜாதி வாரியாய் கொண்டாடப்படுகின்றன
ஆங்கிலத்தில் 'பெடிக்ரீ' என்றே இதற்கு
ஒரு தனி 'சொல்' !
இவ்வளவு ஏன் , ஒருவனை ஒரு
உத்தியோகத்தில் அமர்த்தவோ...
இல்லை திருமணம் முடிக்கவோ
அவன் 'பெடிக்ரீ' பார்க்கப்படுகிறது..
குதிரை பந்தயம்.......
பந்தயம் வைப்பவர் குதிரையின்
'பெடிக்ரீ' .....இதை படித்த பின்னே
பந்தயத்தில் ஈடுபடுகிறான் ...

ஜாதி மனிதனுடன் ஊறி வந்தது
'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று
மேடையில் பேசும் மனிதன் ..
தன் நிஜ வாழ்விலோ வேண்டுவதெல்லாம்
உயர் ஜாதி பொருளே... குடிக்கும்
மது பானம் உட்பட.....

மனிதன் ஒரு வெளிவேஷக்காரன்
ஒரு பத்தாம்பசலி.....

உலகில் பாகுபாடு ஏதோ ஒரு விதத்தில்
இருந்துகொண்டே இருக்கிறது...
மனிதன் வேஷக்காரன்
உள்ளே ஒன்று வெளியே ஒன்று
அன்று முதல் இன்றுவரை பழக்கிவருகிறான்!

ஜாதி பூசல்........
ஏன் . எதற்கு ..... புரியவில்லை
ஜாதி பூசல் என்று ஒழியும்?
நானொன்றும் அறியேன் பராபரமே!

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (12-Nov-19, 1:32 pm)
Tanglish : jathi
பார்வை : 60

மேலே