நாமும் வெடிக்கலாம்

திருடர்கள் தலைவன்:
@@@@@@@@###@@@
■■■■■■ ◆◆◆◆◆◆
நண்பர்களே நமது தொழில் திருட்டு. அரசு அங்கீகாரம் பெறாத தொழில். நம் தொழிலில் நாமும் பல புதுமைகளை அமல்படுத்த வேண்டும்.
@@@@@@
திருடர்கள்: சொல்லுங்க தவைவா.
@@@@@@
இப்பெல்லாம் எதற்கெடுத்தாலும் பட்டாசு வெடிக்கும் கலாச்சாரம் நாடெங்கும் பரவிட்டிருக்குது. நம்ம தொழில் அதற்கு விதிவிலக்கா இருப்பது கொஞ்சமும் சரிமில்லை. பகல் திருட்டுக்கு பட்டாசு வெடிப்புக்கு இடம் தராது.
@@@#@@@
அப்ப எப்ப பட்டாசு வெடிக்கிறது தலைவா?
@@@###
இரவு நேரத்திருட்டுக்குத் தான் பட்டாசு வெடிப்பு சரிப்படும். நம்ம திருட்டுக்கு நாம் பலமுறை நோட்டமிட்டு ஆராய்ச்சி பண்ணித்தான் நாம் திருடப்போறோம்.
@@@@@@
சொல்லுங்க தலைவா. ஆர்வத்தைத் தூண்டாதீங்க.
@##@###@@@
நம்ம மக்கள் எப்படிப்பட்டவங்கன்னு யாராவது ஒருத்தன் சொல்லுங்கடா.
@@#@@@@@@@
(குண்டுக்கண்ணு குப்பன்):
அக்கம் பக்கத்தில சண்டை நடந்தாக்கூட பக்கத்து வீட்டுக்காரங்க வேடிக்கை தான் பாப்பாங்க. பக்கத்து வீட்டுல கண்ணெதிரே கொலை நடந்தாக்கூட காவல் நிலையத்துக்குக்கூட தகவல் சொல்லமாட்டாங்க. பாதையில் அடிபட்டு விழுந்தவனுக்கு ஒதவறங்களவிட வேடிக்கை பாக்கறவங்களும் அதை செல்பேசில படம் எடுக்கிறவங்களும்தான் அதிகம். அடிப்பட்டா கீழே கிடக்கிறவன் கைகடிகாரம், மோதிரம், தங்கச் செயின் பணத்தைச் சுருட்ட சனங்க போட்டி போட்டுட்டு ஓடிவருவாங்க. ஒரு சிலருக்கே ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் சொல்லனும். முதல் உதவி செய்யணும். ஒரு வீட்டில திருட்டு நடக்கும்போது அந்த வீட்டில இருக்கிறவங்க "திருடன், திருடன்"ன்னு கத்தினாக்கூட பக்கத்து வீட்டுக்காரங்க உதவிக்கு வரமாட்டாங்க.
@@@@@@@
ஆமாம்டா குண்டுக்கண்ணா நீ சொன்னதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மை. பொண்ணுங்க வயசுக்கு வந்தா பட்டாசு வெடியுடன் மஞ்சள் நீராட்டு விழா. கல்யாணம், சவ ஊர்வலம், அரசியல் தலைவர் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்தா வெடிமுழக்கம். பொதுக்கூட்ட வெடி. வெற்ற விழா வெடி.
தலைவர்கள், நடிகர்கள், ரவுடீங்க பிறந்த நாள் கொண்டாட்ட வெடி. திரைப்படம் வெளியான அதுக்கும் வெடி. வெடியில்லாம எந்த நிகழ்ச்சியும் நடக்கறதில்ல.
@@@@@@
(எல்லோரும்): சொல்லுங்க தலைவா.
@@@@@@
அதனால நாமும் இரவுநேரத் திருட்டு வெற்றிகரமா நடந்தா, திருட்டுக்கு பலியான வீட்டுக்கு முன்பு ஒரு ஆயிரம் சரவெடி பட்டாசைக் கொளளுத்திப் போட்டுட்டுப் போகணும். அந்தத் தெருவே அதிரானாலும் தூக்கம் கெட்டு முழிச்ச ஒரு பயல்கூட கதவைத் தொறந்திட்டு வெளில வரமாட்டான். அதுதான் நம்ம மக்களின் நாகரிகம். எனவே இன்னிக்கு இரவு முதல் நாம நம்ம புதுமையான இந்தத் திட்டதை நடைமுறைப்படுத்தி பட்டாசு வெடிக்கறதல நாம யாருக்கும் சளைத்தவர்கள் இல்லங்கற நிரூபிக்கணும்.
என்னடா சொல்லறீங்க.
#@#@@@@@@@@
(திருடர்கள் அனைவரும் ஒருமித்த குரலில்): தங்கத் தலைவர் தடிச்ச மூக்கு தங்கவேலர் வாழ்க! தலைவர் வாழ்க நூறாண்டு
(ஒருவன்): தங்கத் தலைவர் தடிச்ச மூக்கு தங்கவேலர்.
@@@@@@
(அனைவரும்): வாழ்க, வாழ்க பல்லாயிரம் ஆண்டு வாழ்க.

எழுதியவர் : மலர் (12-Nov-19, 7:15 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 90

மேலே