கானல் காதல்

அமுதே! உயிரே! கண்ணே! மணியே!
வெல்லமே! வெண்ணிலாவே! வெண்மதியே! இமையே!
குளிர் காற்றே! தேன் ஊற்றே! தென்பாண்டி தமிழே! தங்கரத மயிலே!
இன்னும் எத்தனை வார்த்தைகள் மாலையாக நீ கோர்க்க
தடம்மாறி தடுமாறி நினைவை மறந்து நித்தம் உன்னையே நினைத்தேன்
தனிமையில் தாலாட்டை ரசித்தவளாய் , உன் குரல் காதில் ஒலிக்க
உன்னை தவிர அனைத்தும் மறந்தேன்
சுடும் வெயிலிலும் சுகமாய் நடந்தேன் , உன் நினைவை சுமந்தபடி
பித்தன் போல் பிதற்றினேன் கண்ணாடியில் உன் பின்பம் கண்டதும்
முள் என தெரிந்தும் முன்வந்தேன் முரணான உன் பார்வையால்
கள்வன் என நினைத்த உன் விழிகள் திருடி தான் போனது என் இதயத்தை
காதல் பூத்து குலுங்கும் நந்தவனம் என்று நினைத்த எனக்கு
வெறும் கானல் என புரிய வைத்தாயே என் அழகே!

எழுதியவர் : ஹேமாவதி (13-Nov-19, 12:55 pm)
சேர்த்தது : hemavathi
Tanglish : kaanal kaadhal
பார்வை : 150

மேலே