அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே3

அப்போது 1972 என்று நினைக்கிறேன் ... பெரியப்பா ஆலடிஅருணா “ எண்ணம்” என்ற பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தார்..... இப்போது வண்ணையம்பதியில் உள்ள தனலட்சுமி மேல்நிலை பள்ளி தான் பத்திரிக்கை அலுவலகம்.... பெரியப்பா, அப்பா , சித்தப்பா இவர்களே மாறி மாறி பத்திரிக்கை வெளிவருவதற்கான அத்தனைப் பொறுப்புக்களையும் பகிர்ந்து செய்து வந்தனர்..... அரசியல் விமர்சனங்கள், ஆபிஸ் பாய்,துணுக்குகள், சிறுகதைகள், ஓவியர் வேதா அவர்களின் கேலிச் சித்திரங்கள், திரைப்பட விமர்சனங்கள் ,நடிகை நடிகர்கள் பேட்டி என அத்தனைப் பக்கங்களும் ஸ்வாரஸ்யமாக இருக்கும்..... திரைப்பட விமர்சனத்திற்காக படத்தில் உள்ள ஒரு முக்கியக் காட்சியை இணைப்பார்கள்.... அது அச்சில் ஏறியவுடன் ...அந்தப் படங்களை எல்லாம் சேகரித்து வைத்திருந்தேன்..... அதில் மிகவும் முக்கியமானது “ஞான ஒலி” ,”குடியிருந்த கோயில்” மற்றும் “மயிலும் மயிலும்” என்றத் தலைப்பில் நடிகை மஞ்சுளா அவர்களை ஒரு மயிலுடன் இணைத்து வெளிவந்தப் படங்கள்.....அப்பா எழுதிய “புதிய வார்ப்பு” , “கருகிய மொட்டு” போன்ற சிறுகதைகள் அதில் வெளிவந்தன..... சித்தப்பா செல்வமுத்து அவர்கள் அதில் “கலம்பகம்” என்ற ஒரு பக்கத்தை எழுதி வந்தார்....அதில் உலகில் பல்வேறு இடங்களில் நடந்த ஏதாவது விசித்திரமான , சுவாரஸ்மான நிகழ்வுகளைப் பற்றி வரும்...... கலம்பகத்தில் வந்த அத்தனை நிகழ்வுகளையும் அச்சிடுவதற்கு முன் அதை முதல் முதல் சித்தப்பா கைப்பட ஒரு பெரிய பவுண்ட் நோட்டில் எழுதுவார்.... அது என்னிடம் வெகு நாட்களாய் இருந்தது....... அவ்வப்போது அதை எடுத்து வாசிப்பதுதான் என் பொழுதுபோக்கு....
எம்.ஜி.ஆர் அவர்களின் ஆயிரத்தொரு கேள்விகளுக்கான பதில்கள் என்று பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டது .....

பத்திரிக்கை முழுக்க முழுக்க திமுக’வை ஆதரித்தே எழுதப்பட்டது.... 1974’ல் எம்.ஜி.ஆர் அவர்கள் திமுகவிலிருந்து பிரிந்து அஇஅதிமுக தொடங்கிய தருணம்.... கலைஞர் , புரட்சித் தலைவர் இருவருமே பெரியப்பாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள்.... இனி யாரை ஆதரித்து எழுதுவது.... யாருடன் இணைவது என்பதைப்பற்றி பெரியப்பா , அப்பா,சித்தப்பா ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் குழப்பங்கள் நிலவ......கடைசியில் பத்திரிக்கை வெளியீடு அப்படியே நிறுத்தப்பட்டது...... ஒருவேளை எண்ணம் பத்திரிக்கை தொடர்ந்திருந்தால்....எங்கள் குடும்பத்திலேயே பலர் பெரிய எழுத்தாளர்களாய் இன்று உருவெடுத்திருப்பார்கள் என்பது திண்ணம் !

எழுதியவர் : வை.அமுதா (13-Nov-19, 2:22 pm)
பார்வை : 113

மேலே