தனிமை

புன்னகைத்து பேசுகிறேன்..
வலியற்றவளாய் காட்டிக் கொள்கிறேன்..
மிகத் துணிச்சலாய் நடந்து கொள்கிறேன்..
இருந்தும்..
இமை தாண்டி வெளிவரா என் கண்ணீர்த் துளிகளை உனையன்றி யாரறிவார்..?!
எந்த தோல்வியிலும் கலங்கியதில்லை..
எந்த ஏமாற்றத்திலும் துவண்டதில்லை..
எந்த துரோகத்திலும் வீழ்ந்ததில்லை..
இருந்தும்..
சிறு புறக்கணிப்பொன்றில் உடைந்து போய் விடும் என்னை உனையன்றி யாரறிவார்..?!
நேசம் துரோகம் எல்லாம்
துறந்து வந்தாயிற்று..
தனிமையை விரும்பி ஏற்றாயிற்று..
வலியோடு வாழ பழகியும் ஆயிற்று..
இத்தனைக்கு பிறகும்..
பிடிவாதமாய் ஒட்டிக்கொண்ட உன் நினைவுகளோடு போரிட்டு அழியுமென்னை உனையன்றி யார் அறிவார்
ஆம் -
உன் நினைவுகளை
மறப்பதற்கு
என் நினைவுகளை
நான் இழக்க வேண்டும் என்பதை மட்டும் நீ அறியவில்லையா 💔

எழுதியவர் : ‘’ (14-Nov-19, 12:21 pm)
Tanglish : thanimai
பார்வை : 244

மேலே