ஓட்டுநர்
அன்றைய பொழுது அதிகாலை 4 மணிக்கே எழுந்து காலை பிரார்த்தனையை முடித்துவிட்டு, சுறுசுறுப்பாக தயாராகி கொண்டிருந்தார் தொழிலதிபர் இராமசாமி.
அன்று தான் அவருக்கு மிகவும் முக்கியமான நாள். எந்த அளவிற்கு முக்கியம் என்றால், இதுநாள் வரை அவர் கஷ்டப்பட்டு உயர்த்திய தொழிலை உலக அளவிற்கு கொண்டு செல்லும் நாள் தான் அது.
அன்று நடக்கவிருக்கும் தனது தொழில் சம்பந்தமான கூட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து மிக பெரிய தொழிலதிபர்கள் வருகின்றனர், அந்த கூட்டம் மற்றும் வெற்றிகரமாக முடிந்துவிட்டால் இவரின் தொழில் உலகம் முழுதும் பரவ வாய்ப்புள்ளது.
மணி 6 கடந்தது, வெளியில் 48 வயதுமிக்க கார் ஓட்டுநர் முருகன் வாகனத்தை தயார் நிலையில் வைத்திருந்தார்.
கார் கிளம்பியது, சற்று வெறிசோடிய பாதைதான். கூட்டம் நடக்கும் இடம் சற்று தொலைவு என்பதால் சீக்கிரமே புறப்படுகின்ற சூழ்நிலை.
போக்குவரத்து நெரிசல் அதிகமாக இல்லாத பகுதி தான் ஆதலால் சீக்கிரம் சென்றிடலாம் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார் இராமசாமி.
சிறிது தூரம் சென்ற பின்னர் திடீரென ஒரு சப்தம், வாகனம் பழுதாகி நின்றது.
ஓட்டுனரோ என்ன பிரச்சனை என்று பார்த்துவிட்டு சரி செய்ய முயன்றார் ஆனால் முடியவில்லை.
ஓட்டுனருக்கோ பயம், தனது முதலாளி நல்லவர் தான் அனால் சற்று கோபக்காரர் வேலைய விட்டு நிறுத்தி விட்டால் என்ன செய்வது, பையன் படிப்புக்கு பணம் எப்படி கட்டுவது, தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்று ஒரு பக்கம் எண்ணம் எழுந்தாலும் அதை எல்லாம் ஒரு பக்கமாய் உதறிவிட்டு முதலாளியை எப்படியாவது சரியான நேரத்தில் சேர்த்துவிட வேன்டும் என்று அந்த முயற்சியில் இறங்கினார், ஒரு பணியாளாக முதலாளியின் நிலைமையை புரிந்தவாறு .
அதே எண்ணத்தில் தன் அலைபேசியை எடுத்து பேசிய அதே நேரம் கண்களில் கோப அனல் கொதிக்க வாகனத்தில் இருந்து இறங்கினார் இராமசாமி. கோபத்தில் பயங்கரமாக திட்டிவிட்டார், எவ்வளவு முக்கியமான நேரம் இதை எல்லாம் முன்னாடியே பார்த்து சரி செய்து வைத்து இருக்க கூடாதா, இப்போ மெக்கானிக்கை அழைத்து என்ன பயன்.
உனக்கெல்லாம் எங்கே இருந்து தெரிய போகிறது இது போன்ற வாய்ப்புகளின் அருமை.
இனிமேல் நீ வேலைக்கு வர வேண்டாம் என்று கடுமையாக கடிந்துகொண்டார்.
முதலாளி ஓட்டுனரை கடிந்து கொண்டிருந்த அதே வேளையில். ஒரு ஆசாமி எந்த வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அந்த ஆசாமி இவ்ரகள் இருக்கும் இடத்தை அடையும் முன்பே இராமசாமி ஓடி அவரை வழி மறைத்து, நிலைமையை எடுத்து கூறிய பின்னர் தன் பொருட்களை எடுத்துக்கொண்டு அவரின் அனுமதியோடு இருசக்கர வாகனத்தின் பின்னல் ஏறிக்கொண்டார்.
போகும் வழியில் தனது ஓட்டுனரை திட்டிக்கொண்டே சென்றார். அந்த ஆசாமியோ பதில் ஏதும் சொல்லாமல், வாகனத்தை விரட்டி சரியான நேரத்திற்கு அவரை அங்கு சேர்த்தார்.
தன்னை கூட்டி வந்தவருக்கு நன்றி கூறிவிட்டு சென்றார் இராமசாமி.
அந்த ஆசாமியோ தனது அலைபேசியை எடுத்து அப்பா அவரை சரியான நேரத்தில் சேர்த்துவிட்டேன் என்று கூறியபின் தான், முருகனுக்கு மூச்சே வந்தது.
இன்று எந்த பலனையும் எதிர்பாராமல் தன் குடும்ப கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் தன் முதலாளிகளின் முன்னேற்றத்திற்க்காக பாடுபடும் அணைத்து தொழிலாளிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அவர்களுக்காக இந்த கதையை சமர்ப்பிக்கிறேன்.

