பெண்மைத் தென்றல்

வடித்தெடுத்த சிலை வஞ்சியவள் பொன்மேனி
கடித்தால் தேனூறும் இதழ்கள் செம்மாங்கனி
ஒடியும் இடை கொடியை வளைக்காதே பெண்ணே இனி
துடிக்கும் மீன்கள் விழி அவை நீந்தும் அழகோ தனி
அடிக்கும் வெயில் ஏக்கம் தணிக்குமா இளந் தென்றல்
வெடிக்கும் இதயம் காதல் களிம்பு பூசுமா பெண்மை


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (14-Nov-19, 1:20 pm)
பார்வை : 143

மேலே