காந்தள்

கார்த்திகை திங்கள் மலர்ந்தது
தீயின் உருக்கொண்டு,
காந்தள் மலர்களும் பூத்தது
கந்தக மேனியர் வீரம் சொல்லி
காவிய பாடலை இசைத்தது
அவர் பாதங்கள் தொழுதே
பாரினில் தான் பிறந்த
புண்ணிய பலனை எய்தது
எண்ணிய அவர் இலட்சியம்
அடையவே அவர் வழியில்
திண்ணம் கொண்டு எழுவோம்
காந்தளால் அவர் பாதங்கள் தொழுவோம்

எழுதியவர் : பவிதன் (14-Nov-19, 1:51 pm)
சேர்த்தது : பவிதன்
பார்வை : 45

மேலே